பயிர் பாதுகாப்பு :: குலோரியோசா சூப்பர்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை கருகல் நோய்: ஆல்டர்நெரியாஆல்டர்நெட்டா

அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில், சிறிய வட்ட வடிவ பழுப்பு  நிற புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின்னர் புள்ளிகள் வளையங்கள் கொண்டு பெரிய புள்ளிகளாக மாறி பின்பு  இலைகள்  முழுமையாக கருகி விடும்.
மேலாண்மை:
  • நடவு செயுது 30 மற்றும் 60 வது நாட்களுக்கு  பிறகு 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளிக்கவும்.

இலை கருகல்

வேர் அழுகல் மற்றும் கிழங்கு அழுகல் நோய்: மேக்ரோபோமினாபெசியோலீனா  

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாதல், நிறம் மாறுதல், வேர் அழுகல் மற்றும் தண்டு மீது பழுப்பு காயங்கள் உருவாகுதல்  முக்கிய அறிகுறிகள் ஆகும்.  கிழங்குகளுக்கும் அழுகல் ஏற்படலாம். தண்டில் சிறிய கருப்பு புள்ளிகள் போன்ற  ஸ்க்லோரோசியாஅமைப்புகள் தோன்றும்.

மேலாண்மை:

  • கிழங்குகளை சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்  2 கிராம் /லி தண்ணீரில் இருபதுநிமிடங்கள் நேர்த்தி செய்யவும்.
  • நடவு செயுது 30 நாட்களுக்கு  பிறகு ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ்  மருந்தூட்டல். 

பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:

முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003
வேர் அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015